முதல்-அமைச்சர் செயலாளருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி; ஐகோர்ட்டு உத்தரவு

முதல்-அமைச்சரின் செயலாளரான உமாநாத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
முதல்-அமைச்சர் செயலாளருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி; ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், பா.ஜ.க., வக்கீல் ஏ.மோகன்தாஸ் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘ தமிழ்நாடு முதல்-அமைச்சரின் செயலாளராக பதவி வகிக்கும் ஐஏஎஸ் அதிகாரி உமாநாத், தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு தன்னிச்சையாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். எனவே அவர் மீது தேர்தல் நடத்தை விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், ஐஏஎஸ் அதிகாரியான உமாநாத்துக்கு எதிராக மனுதாரர் எந்த குற்றச்சாட்டையும் குறிப்பிட்டு முன்வைக்கவில்லை. தேர்தல் விதிகளை மீறி அவர் செயல்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’’ என்று கூறப்பட்டது. இதை பதிவுச் செய்துக் கொண்ட நீதிபதிகள், ‘ முதல்-அமைச்சரின் செயலாளரான உமாநாத் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com