அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு

தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ்.பி.வேலுமணி களமிறங்கியுள்ளார்
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை,

கோவையை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ' கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து விவரங்களை தற்போது ஒப்பிடும்போது, சொத்துகள் அதிக அளவில் இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்களை அவர் தாக்கல் செய்யவில்லை' என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொத்து விவரங்களின் உண்மைத்தன்மை மறைக்கப்பட்டதா? என வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தமது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் நடைபெற்று முடிந்து விட்டது, தற்போது வேட்புமனுவில் தெரிவித்த சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடமுடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com