முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி; ஐகோர்ட்டு உத்தரவு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி;  ஐகோர்ட்டு உத்தரவு
Published on

கோவையைச் சேர்ந்த வாக்காளரான விக்னேஷ்வரன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘ அதிமுக முன்னாள் அமைச்சரான எஸ்.பி.வேலுமணி கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவுக்கும், தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவுக்கும் முரண்பாடுகள் உள்ளன. தற்போது வேலுமணியின் சொத்து விவரங்கள் அதிகரித்துள்ளன.

இதுதொடர்பான ஆதாரங்களை அவர் தனது வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை. குறிப்பாக வேலுமணியின் முதலீடுகள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் தற்போதைய வேட்புமனுவில் மறைக்கப்பட்டுள்ளன. எனவே வேலுமணியின் வருமானம் மற்றும் சொத்து விவரங்கள், முதலீடுகள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி, நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com