அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கு ரத்து.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தப்பட்டதாகவும், விதிகளை மீறவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா கட்டுப்பாடுகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com