நெய்வேலி அருகே டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

நெய்வேலி அருகே டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெய்வேலி அருகே டாஸ்மாக் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
Published on

நெய்வேலி, 

பண்ருட்டி அருகே கீழக்குப்பத்தை சேர்ந்தவர் தவநாதன் (வயது 48). இவர் நெய்வேலி அருகே அம்மேரி டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, விருத்தாசலம் அருகே தொப்புலிகுப்பத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் டாஸ்மாக் கடைக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த தவநாதன், விற்பனையாளர்கள் சிவசங்கர், செந்தில்குமார் ஆகியோரிடம் பணம் கொடுக்காமல் மது கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன் அவர்கள் 3 பேரையும் ஆபாசமாக பேசி, பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி தவநாதன் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் லட்சுமணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com