பள்ளி கல்வி துறை இயக்குனர்கள் மீது வழக்கு தொடர லஞ்ச ஒழிப்பு துறைக்கு அரசு அனுமதி

பள்ளி கல்வி துறை இயக்குனர்கள் மீது வழக்கு தொடர லஞ்ச ஒழிப்பு துறைக்கு அரசு அனுமதியளித்து உள்ளது.
பள்ளி கல்வி துறை இயக்குனர்கள் மீது வழக்கு தொடர லஞ்ச ஒழிப்பு துறைக்கு அரசு அனுமதி
Published on

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக அறிவொளி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக அவரது அலுவலகத்திலும், வீட்டிலும் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையானது, மாணவர்களுக்கான இதழ்கள் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் மோசடி நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து நடைபெற்றது.

இந்த நிலையில், பள்ளி கல்வி துறை இயக்குனர்கள் அறிவொளி, லதா, ராமேசுவர முருகன், கருப்புசாமி மீது லஞ்ச புகார்கள் எழுந்ததன் எதிரெலியாகவும், சோதனையில் சிக்கிய ஆதாரங்களை வைத்தும் 4 இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறை அனுமதி கேட்டது.

இதில், முதற்கட்டமாக, அறிவொளி, லதா மீது வழக்கு தொடர அரசு அனுமதியளித்து உள்ளது. இதேபோன்று ராமேசுவர முருகன் பெற்ற லஞ்சப்பணத்தில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருவது அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து அவரது நகைக்கடையிலும் விரைவில் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com