முதியவரை தாக்கிய மகன், மருமகள் மீது வழக்கு

சொத்து பிரச்சினையில் முதியவரை தாக்கிய மகன், மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதியவரை தாக்கிய மகன், மருமகள் மீது வழக்கு
Published on

தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர் முல்லைநகர் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 70). கூலித்தொழிலாளி. இவரிடம் சொத்து பிரச்சினை தொடர்பாக அவருடைய மகன் பரமேஸ்வரன் (30), மருமகள் ராதிகா ஆகியோர் வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பரமேஸ்வரன் அரிவாளால் பழனிசாமியின் கையை கிழித்து காயப்படுத்தினார். இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பரமேஸ்வரன், ராதிகா ஆகிய 2 பேர் மீதும் பழனிசெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com