

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மகன் ரவிக்குமார். இவர் சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் என்பவரிடம் கடந்த 2014-ம் ஆண்டு வட்டிக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு மாதந்தோறும் ரவிக்குமார் வட்டி பணம் கொடுத்து வந்த நிலையில், சம்பவத்தன்று வேலாயுதம் ரவிக்குமாரின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு, மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் கந்து வட்டி கேட்டு மிரட்டிய வேலாயுதம் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.