சேலம் வடக்கு தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

வழக்கை நிராகரிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில், எம்.எல்.ஏ., கே.சிவகுமார் மனு தாக்கல் செய்தார்.
சேலம் வடக்கு தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ. வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
Published on: 

சென்னை,

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இந்த தேர்தலில், சேலம் வடக்கு தொகுதியில் த.வெ.க., சார்பில் கே.சிவகுமார் போட்டியிட்டு 14 ஆயிரத்து 34 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இவரது வெற்றியை எதிர்த்து, இரண்டாம் இடத்தை பிடித்த தி.மு.க., வேட்பாளர் ஆர்.ராஜேந்திரன், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில், எம்.எல்.ஏ., கே.சிவகுமார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, அனைத்து தரப்பு வாதங்களை கேட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்தநிலையில், இந்த தீர்ப்பை பிறப்பிதார். அதில், தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி சிவகுமார் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்கிறேன். அவரது வெற்றியை எதிர்த்து தி.மு.க., வேட்பாளர் ஆர்.ராஜேந்திரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com