நெல்லை மாவட்டத்தில் ஓட்டு போட்டதை வீடியோ எடுத்து வெளியிட்ட 2 பேர் மீது வழக்கு

நெல்லை மாவட்டத்தில் ஓட்டு போட்டதை வீடியோ எடுத்து வெளியிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை,

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சட்டமன்ற பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடந்து முடிந்தது. அன்றைய தினம் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மாநிலம் முழுவதும் பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

நெல்லை மாவட்டத்தில் முக்கூடல் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த ஒருவர் தான் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் வள்ளியூர் அருகே உள்ள பழவூர் பகுதியிலும் ஒரு வாக்காளர் அதேபோன்று வீடியோ எடுத்து வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாவட்ட போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com