15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு

கோப்புப்படம்
5 பேர் மீதும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் கிராமம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகன் கண்ணதாசன் (வயது 24). அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த மாதம் 25-ந் தேதி கோவிலில் திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வாழ்ந்து வருவதாக ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய சமூக நல அலுவலர் மனோரஞ்சிதத்திற்கு புகார் வந்தது.
இது குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி விசாரணை நடத்தினார். விசாரணையை தொடர்ந்து, கண்ணதாசன், அவருடைய தந்தை அண்ணாதுரை, தாயார் சின்ன பாப்பா, அக்காள் சித்ரா, தங்கை பிரியா ஆகிய 5 பேர் மீதும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






