பெண்ணை தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெண்ணை தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது வழக்கு
Published on

 தோகைமலை அருகே உள்ள வேலாயுதம்பாளையம் காலனி தெரு பகுதியை சேர்ந்தவர் பரிமளா (வயது 39). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மகளிர் சுய உதவி குழு சம்பந்தமாக கடன் பெற்றதாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி பரிமளா வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் ரவிச்சந்திரன் என்பவர், பரிமளாவிடம் கடனுக்கான தவணை தொகை கேட்டுள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் பரிமளாவை தாக்கினார்.இதில் காயம் அடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com