உல்லாசம் அனுபவித்துவிட்டு ஆசிரியையை திருமணம் செய்ய மறுப்பு: காதலன் மீது பாய்ந்த வழக்கு

திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி அந்த பெண்ணிடம் சேதுபதி உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது.
உல்லாசம் அனுபவித்துவிட்டு ஆசிரியையை திருமணம் செய்ய மறுப்பு: காதலன் மீது பாய்ந்த வழக்கு
Published on

கள்ளக்குறிச்சி,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா கரையான்தின்னி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சேதுபதி (28). இவருக்கும் சின்னசேலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையான 26 வயதுடைய பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.

இந்த நிலையில் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி அந்த பெண்ணிடம் சேதுபதி உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. இதில் அந்த பெண் கர்ப்பமானாள். இது குறித்து அந்த பெண் சேதுபதியிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு சேதுபதி, திருமணம் செய்து கொள்கிறேன். இருப்பினும் கருவை கலைக்குமாறு பெண்ணிடம் அவர் கூறியதாக தெரிகிறது. அதன்படி அந்த பெண் கருவை கலைத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சேதுபதியிடம் பேசியுள்ளாா. அப்போது அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சேதுபதியிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார் இதற்கு சேதுபதியின் பெற்றோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் சேதுபதி மற்றும் இவரது தந்தை லோகநாதன், தாய் அன்பு ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com