சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்க கோரி வழக்கு! - விசாரணை 2-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, 2006 மற்றும் 2026 செப்டம்பர் மாதங்களில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை ஐகோர்ட்டு
Published on: 

சென்னை,

ஐகோர்ட்டு வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை டிசம்பர் 2-ந் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வழக்காடு மொழி

சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வலியுறுத்தி, கடந்த 2006 மற்றும் 2026 செப்டம்பர் மாதங்களில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த தீர்மானங்களை ஐனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம், வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

கோரிக்கை

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதே கோரிக்கையுடன் பாமக மற்றும் மதுரை அமர்வு வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் மேலும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அனைத்து வழக்குகளையும் சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அனைத்து வழக்குகளையும் டிசம்பர் 2-ந்தேதி விசாரணைக்குப் பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X