தனியார் பள்ளி மாணவர்கள் கல்வி கட்டண விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தனியார் பள்ளி மாணவர்கள் கல்வி கட்டண விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளி மாணவர்கள் கல்வி கட்டண விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Published on

சென்னை,

கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் பஞ்சாப் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி தனியார் பள்ளிகள் மொத்த இடங்களில் 25 சதவீத இடத்தை அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே வழங்க வேண்டும். தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி செலவு தொகையை கணக்கிட்டு, அந்த குறைந்த கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இது தன்னிச்சையானது. தனியார் பள்ளிகள் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும்? என்பதை நிர்ணயிக்கும் குழு தமிழகத்தில் உள்ளது. இந்த குழு எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கிறதோ அந்த தொகையை தனியார் பள்ளிகளுக்கு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் விசாரித்தனர் பின்னர், மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com