ஊராட்சித்துறை வங்கிக்கணக்கில் இருந்து ரூ.22 கோடியை சுருட்டிய வழக்கு: கைது எண்ணிக்கை 14 ஆக உயர்வு

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
ஊராட்சித்துறை வங்கிக்கணக்கில் இருந்து ரூ.22 கோடியை சுருட்டிய வழக்கு: கைது எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Published on: 

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் தமிழக அர சின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கிலிருந்து ரூ.22.35 கோடியை 'ஆன்லைன்' மோசடி கும்பல் சுருட்டியது.

இந்த மோசடி சம்பவம் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநரக கண்காணிப்பாளர் ராம்பிரசாத், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து புகார் மனு அளித்தார். அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்' போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

முதற்கட்ட விசாரணையில் மொத்தம் 46 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.22 கோடியே 30 லட்சத்து 4 ஆயிரத்து 879 பணம் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசா ரணை அடிப்படையில் ஏற்கனவே 12 பேர் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில், தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டை பகுதியை சேர்ந்த முஸ்தபா (வயது 44) என்பவரும், அவரது மனைவி கமிலா எய்மன் (36) என்பவரும் கைது செய்யப்பட்டனர். கமிஷன் பணத்திற்காக இவர்கள் தங்களது வங்கிக்கணக்கை, மோசடி நபர்கள் பயன்படுத்த உதவி செய்துள்ளதாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் ரூ.1% கோடி பணம் கைதானவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினார்கள்.

இதுவரை 14 பேர் மட்டும்தான் கைதாகியுள்ளனர். மேலும் பலரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த மோசடியை அரங்கேற்றிய குற்றவாளிகள், வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டுள்ளனர். அவர்களை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

X