செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: ரவுடியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் கிடுக்கிப்பிடி விசாரணை

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையிலான போலீசார் தொடர்ந்து ஆலம்பூண்டி கிராமத்தில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: ரவுடியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் கிடுக்கிப்பிடி விசாரணை
Published on: 

செஞ்சி,

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா என்ற ஹேமா வதி கடந்த மாதம் 11-ந் தேதி இரவு வீட்டில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்தபோது மறுநாள் அதிகாலை திடீரென காணாமல் போனாள். சிறுமி காணாமல்போய் நேற்றுடன் 26 நாட்களான நிலையில் 16-வது நாளாக நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் காணாமல் போன சிறுமி குறித்து இதுவரை எந்தவிதமான சிறு தடயமும் கிடைக்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர்.

சிறுமி காணாமல்போய் 26 நாட்களாகியும் அவளது கதி என்ன ஆனது என்றே தெரியாமல் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. சிறுமியை பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கா ததால் அவளது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் மட்டு மின்றி பல்வேறு தரப்பினரும் பெரும் கலக்கத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.

இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையிலான போலீசார் தொடர்ந்து ஆலம்பூண்டி கிராமத்தில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் 3 முறை விசா ரிக்கப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான பரதன்தாங்கல் பகுதியை சேர்ந்த ரவுடியை நேற்று 4-வது முறையாக மீண்டும் தனியாக அழைத்து அவனிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

X