செஞ்சி சிறுமி மாயமான வழக்கு: சந்தேகத்தின் பேரில் 10 பேரிடம் சிபிசிஐடி விசாரணை

எதிர்வீட்டு பெண் மஞ்சுளா உறவினர் என்று கூறப்படும் இளைஞர் உள்பட 10 பேரிடம் இந்த விசாரணையானது நடைபெற்று வருகிறது.
செஞ்சி சிறுமி
செஞ்சி சிறுமி
Published on: 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் இரண்டாவது மகள் ஹேமலதா 7; கடந்த அக். 11ம் தேதி இரவு தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் மறுநாள் அதிகாலை மர்மமான முறையில் காணாமல் போனார். சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து 10 தினங்கள் விசாரணை நடத்தினர்.

சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்காததால், வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது.இதையடுத்து டி.எஸ்.பி.,க்கள் கீதா, வேல்முருகன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிறுமி மாயமாகி இன்றுடன் 40 நாட்களாகியும் எந்த உறுதியான தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிறுமியின் தாய் பவானி, பாட்டி சாந்தி மற்றும் எதிர் வீட்டு பெண் மஞ்சுளாவிடம் சிபிசிஐடி டிஎஸ்பி வேல் முருகன் தலைமையிலான போலீசார் அண்மையில் விசாரணை நடத்தியிருந்த நிலையில், இன்று 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மஞ்சுளா உறவினர் என்று கூறப்படும் இளைஞர் உள்பட 10 பேரிடம் இந்த விசாரணையானது நடைபெற்று வருகிறது.

X