சேலம் தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது.
சேலம் தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு
Published on

சேலம்,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சேலத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் தேர்தல் விதிகளை மீறி பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்த தவெக மாவட்டச் செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட 3 நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com