திருப்பூரில் சீமான் மீது வழக்குப்பதிவு

தேர்தல் விதிமுறைக்கு மாறாக இரவு 10 மணிக்கு மேலும் பொதுக்கூட்டத்தில் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூரில் சீமான் மீது வழக்குப்பதிவு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட் சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அவர் திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். அப்போது தேர்தல் விதிமுறைக்கு மாறாக இரவு 10 மணிக்கு மேலும் பொதுக்கூட்டத்தில் பேசியதாக தேர்தல் பறக்கும் படையினர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக சீமான் மீது இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களான தினேஷ் (திருப்பூர் தெற்கு), கார்மேகன் (காங்கயம்), தமிழினி யன் (பல்லடம்). ராம்குமார் (உடுமலை), திவ்யா (தாராபுரம்), அபிநயா (திருப்பூர் வடக்கு), ராதாமணி (மடத்துக்குளம்). மேனகா (அவினாசி) ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com