தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரம்: செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு

தமிழகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரம்: செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு
Published on

சென்னை,

தவெக கூட்டணி ஆட்சி

சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளில் வென்ற விஜய் தலைமையிலான த.வெ.க., தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

அதே நேரம் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல். ஏ.க்கள் அடுத்தடுத்து தங்களது எம்.எல்.ஏ.க் கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து வருகிறார்கள். இதற்கிடையில் கட்சி மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பெரும்பான்மை இல்லாமல் த.வெ.க. அரசு நடைபெறுகிறது. எனவே தமிழகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என்று கூறி வருகிறார்.

ரூ.35 கோடி பேரம்

இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தி.மு.க. முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக்குமாரும் இதில் பின்புலமாக செயல்பட்டது தெரியவந்தது.

கைதான நரேசை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சென்னையில் வைத்து நேரடியாக சந்தித்து பேசியதாகவும், செந்தில் பாலாஜியும், அசோக்குமாரும் கூறிய அறிவுரையின் பேரிலேயே எம்.எல்.ஏ. இளையராஜாவுடன் பேசியதாகவும் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

வழக்குப்பதிவு

இந்நிலையில், தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com