

புதுக்கோட்டை,
கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலாம் (வயது 55), தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த அப்துல் முகமது (52) என்பவருக்கு ரூ.500 கடன் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று அப்துல் சலாம் தனது பணத்தை திருப்பி தருமாறு அப்துல் முகமதுவிடம் கேட்டு உள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில், ஆத்திரம் அடைந்த அப்துல் முகமது, அப்துல் சலாமின் கைகள் மற்றும் காதுகளை கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார். இதையடுத்து, அவர் அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் அப்துல் முகமது மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.