

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் த.வெ.க. கிழக்கு மாவட்ட செயலாளரான மலர்விழி ஜெயபாலா தலைமையில் நேற்று முன்தினம் திருப்புல்லாணி அருகே சுமைதாங்கி கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரித்தனர். த.வெ.க. தலைவர் விஜய் படத்துடன் கூடிய ஸ்டிக்கர்களை வீடுகளில் ஒட்டினர்.அப்போது, சுமைதாங்கி கிராமத்தை சேர்ந்த சிறுவர்களை ‘ஓம் சக்தி பராசக்தி, தி.மு.க. ஒரு தீய சக்தி’ என கோஷமிட வைத்தவாறு கிராமத்தில் பிரசாரம் செய்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருஉத்தரகோசமங்கை சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். ராமநாதபுரம் த.வெ.க. கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா உள்பட நிர்வாகிகள் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம், சிறார் நீதி சட்டம், தேர்தல் செல்வாக்கிற்காக குழந்தைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இதுதொடர்பான வீடியோ காட்சிகள் அடிப்படையில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.