சட்டவிரோதமாக 2 பாஸ்போர்ட் வைத்திருந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு

வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு வாலிபர், முதலில் வைத்திருந்த பாஸ்போர்ட் காணாமல் போய்விட்டதை அடுத்து, மீண்டும் விண்ணப்பித்து புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளார்.
சட்டவிரோதமாக 2 பாஸ்போர்ட் வைத்திருந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக 2 பாஸ்போர்ட் வைத்திருந்த வாலிபர் மீது எஸ்.பி. அலுவலகப் பரிந்துரையின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஸ்போர்ட் புதுப்பித்தல்

தூத்துக்குடியைச் சேர்ந்த உசேன் (வயது 38), வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் முதலில் வைத்திருந்த பாஸ்போர்ட் காணாமல் போய்விட்டதை அடுத்து, மீண்டும் விண்ணப்பித்து புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளார். பின்னர் வேலைக்காக வெளிநாடு சென்று வந்த நிலையில், தொலைந்த பாஸ்போர்ட் கிடைக்கவே அதனை 2016-ம் ஆண்டு புதுப்பித்துள்ளார்.

2 பாஸ்போர்ட் வைத்திருந்ததால் போலீசார் வழக்குப்பதிவு

தற்போது மீண்டும் பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்து பாஸ்போர்ட் சேவா கேந்திரா விசாரணையில் தெரியவந்த நிலையில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது சட்டவிரோதமாக இரண்டு பாஸ்போர்ட் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்ய மாவட்ட எஸ்.பி. அலுவலகம் மூலம் தூத்துக்குடி வடபாகம் போலீசாருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி உசேன் மீது பாஸ்போர்ட் சட்டப்பிரிவுகள் 10 மற்றும் 12(பி) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com