த.வெ.க. கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை யாரும் பயன்படுத்த முடியாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
த.வெ.க. கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு
Published on

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை உரிமைகள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை யாரும் பயன்படுத்த முடியாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com