முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கை ரத்து செய்யக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை,

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மீண்டும் நாளை முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுவழக்கு தொடர்பான அந்த மனுவில், முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் ஊரடங்கின்போது கூட பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும் இரவு நேரங்களில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்திலும் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணை செய்த மதுரை ஐகோர்ட் கிளை இந்த மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com