வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளது.

வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வு
வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை உயர்ந்துள்ளது.
Published on

நொய்யல், மரவாபாளையம், வேட்டமங்கலம், குளத்துபாளையம், குந்தாணி பாளையம், வடுகபட்டி, ஓலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த வாரம் சிப்ஸ் தயாரிப்பவர்கள் மரவள்ளி கிழங்கை டன் ஒன்று ரூ.15 ஆயிரத்திற்கு வாங்கிச் சென்றனர். இந்த வாரம் டன் ஒன்றை ரூ.17 ஆயிரத்திற்கு வாங்கி சென்றனர். வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com