நரிக்குறவர்களுக்கு சாதி சான்றிதழ்

நரிக்குறவர்களுக்கு சாதி சான்றிதழ்களை உதவி கலெக்டர் வழங்கினார்.
நரிக்குறவர்களுக்கு சாதி சான்றிதழ்
Published on

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள லாடவரம் ஊராட்சியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் தலைமை தாங்கினார். தாசில்தார் வசந்தி, ஊராட்சி மன்ற தலைவர் தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுப்பாடி வருவாய் ஆய்வாளர் தணிகாசலம் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார் கலந்துகொண்டு 164 பேருக்கு சாதி சான்றிதழ் வழங்கினார். இதில் திமிரி வருவாய் ஆய்வாளர் சந்தியா, கிராம நிர்வாக அலுவலர்கள் சின்னப்பையன், மஞ்சுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com