இளம் தலைமுறையை நல்ல முறையில் வழிநடத்த வேண்டிய கல்வி நிறுவனங்களில் சாதி புரையோடிப் போயிருக்கிறது - மநீம கண்டனம்

இளம் தலைமுறையை நல்ல முறையில் வழிநடத்த வேண்டிய கல்வி நிறுவனங்களில் சாதி புரையோடிப் போயிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
இளம் தலைமுறையை நல்ல முறையில் வழிநடத்த வேண்டிய கல்வி நிறுவனங்களில் சாதி புரையோடிப் போயிருக்கிறது - மநீம கண்டனம்
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"குறிப்பிட்ட சமூக மாணவர்கள் என்றாலே பிரச்சினைதான். உன் முகத்தைப் பார்த்தாலே நீ எந்த சாதி என்று தெரிகிறது" என மாணவரிடம் விஷத்தைக் கக்கியிருக்கிறார் சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியை ஒருவர். இது தொடர்பான ஆடியோ வெளியாகி, அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், "அந்தக் குறிப்பிட்ட சாதி பசங்களால்தான் நமக்குப் பிரச்சனை, நீ எந்த கம்யூனிட்டி?" என்றும் அவர் கேட்டிருக்கிறார். தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய பேராசிரியர்களே, அந்த கொடுங்குற்றத்தைப் புரிவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.

இளம் தலைமுறையை நல்ல முறையில் வழிநடத்த வேண்டிய கல்வி நிறுவனங்களில் சாதி புரையோடிப் போயிருக்கிறது. சாதியை முன்னிறுத்தி, மாணவர்களை இழிவுபடுத்திப் பேசியது உண்மையெனில், சம்பந்தப்பட்டவரை தண்டிக்க வேண்டும். இனியும் இதுபோல நிகழாத வகையில், கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." என்று கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com