விஷம் குடித்து கால்நடை பண்ணை உரிமையாளர் தற்கொலை

விஷம் குடித்து கால்நடை பண்ணை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து கால்நடை பண்ணை உரிமையாளர் தற்கொலை
Published on

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது 50). இவர் திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த தேவரப்பம்பட்டி கல்லுக்குடி பகுதியில் கால்நடை பண்ணை அமைத்து 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் நோய் தாக்குதல் காரணமாக அடுத்தடுத்து ஆடுகள் செத்ததால் பாலுவிற்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமடைந்த பாலு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பாலு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com