

சென்னை
சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரை நிகழ்த்தினார் அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தியுள்ளார். மேலும் கோதாவரி உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பிவிடுவது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தார்.
* முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கும்
* கறவை பசு, வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
* மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சினையில், சட்ட உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு உறுதியாக உள்ளது
* 2016 -17ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.2,478 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது
* இழப்பீடு வாங்கும் விவசாயிகளின் எண்ணிக்கையை உயர்த்த அரசு நடவடிக்கை
* ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மத்திய அரசு உதவியுடன் ரூ.200 கோடி ஒதுக்கப்படும்
* நீராபானம் விற்பனை, தென்னை விவசாயிகளுக்கு மிகப்பெரிய பயனளிக்கிறது.
* அண்ணா பல்கலை. மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காக ஜப்பான் உதவியுடன் புதிய திட்டங்கள்.
* மின்வாரியத்தின் நிதிநிலைமை சீரமைக்கப்பட்டுள்ளது.
* இதுவரை 1.88 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
* நாகை - கன்னியாகுமரி வரையிலான சாலைகள் மேம்படுத்தப்படும்
* நகர்புறங்களில் சுயஉதவி குழுக்கள் உருவாக்க நடவடிக்கை
#TNGovernor | #TNAssembly | | #BanwarilalPurohit