கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பின்னரே காவிரி மேலாண்மை வாரியம் அமையும்: தங்க தமிழ்செல்வன்

கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பின்னரே காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார். #NanjilSampath #ThangaTamilSelvan
கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பின்னரே காவிரி மேலாண்மை வாரியம் அமையும்: தங்க தமிழ்செல்வன்
Published on

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என கூறி டி.டி.வி. தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் இன்று விலகியுள்ளார்.

அண்ணாவையும், திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு கட்சி நடத்தலாம் என டி.டி.வி. தினகரன் நினைக்கிறார். இந்த அநியாயத்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், நாஞ்சில் சம்பத்தின் விலகல் வருத்தம் அளிக்கிறது. அவரை மீண்டும் அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

அவர், டி.டி.வி. தினகரன் தொடங்கியது கட்சி இல்லை. அது அமைப்பே என்றும் கூறியுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படியே தினகரன் புதிய அமைப்பினை தொடங்கினார்.

காவிரி மேலாண்மை வாரியத்தினை மத்திய அரசு அமைக்கும் என்ற நம்பிக்கையில்லை. கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பின்னரே காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com