காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நீர்ப்பாசன வல்லுனரை நியமிக்க வேண்டும்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நீர்ப்பாசன வல்லுனரை நியமிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நீர்ப்பாசன வல்லுனரை நியமிக்க வேண்டும்
Published on

சென்னை,

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கான அறிவிக்கை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் எந்த அற்புதங்களையும் நிகழ்த்திவிடாது என்ற போதிலும், காவிரி நீர் குறித்த கோரிக்கைகளையும், புகார்களையும் தெரிவிக்க ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற வகையில் இது வரவேற்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றம் பரிந்துரைத்த காவிரி மேலாண்மை ஆணையம் ஒரு தலைவரையும், முழுநேர மற்றும் பகுதி நேர உறுப்பினர்களாக 8 பேரையும் கொண்டிருக்கும். இவர்களில் 8 பேர் நீர்ப்பாசனத்துறை வல்லுனராகவும், ஒருவர் வேளாண்-பொருளாதார வல்லுனராகவும் இருப்பார்கள் என்பது தான் அந்த அமைப்பின் சிறப்பாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com