காவிரி நீர் விவகாரம்: முதல்-அமைச்சர் தலைமையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது

தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தற்போது தொடங்கி உள்ளது
காவிரி நீர் விவகாரம்: முதல்-அமைச்சர் தலைமையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது
Published on

சென்னை,

காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று அறிவித்துள்ள கர்நாடகா அரசுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று  அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி .சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கி உள்ளது. 

இந்த கூட்டத்தில் அ.தி. மு.க. சார்பில் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் செல்வப்பருத்தகை,பா.ஜ.க. சார்பில் கரு. நாகராஜன், கருப்பு முருகானந்தம், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com