காவேரிப்பாக்கம் பேரூராட்சி கூட்டம்

காவேரிப்பாக்கம் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
காவேரிப்பாக்கம் பேரூராட்சி கூட்டம்
Published on

காவேரிப்பாக்கம் பேரூராட்சி கூட்ட அரங்கில் நேற்று பேரூராட்சி கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சரவணன், துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வேண்டும். டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் குடிநீர் வினியோகம் செய்வது குறித்தும், சாலை வசதியை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் இளநிலை உதவியாளர் சுமதி, பேரூராட்சி உறுப்பினர்கள், சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com