குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், காவல் ஆய்வாளர் சம்பத்துக்கு சிபிஐ சம்மன்

குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், காவல் ஆய்வாளர் சம்பத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
குட்கா ஊழல் வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னன், காவல் ஆய்வாளர் சம்பத்துக்கு சிபிஐ சம்மன்
Published on

சென்னை,

குட்கா ஊழல் தொடர்பாக சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை உள்பட பல்வேறு இடங்களில் 5-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ், குட்கா ஆலை உரிமையாளர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

அப்போது சிக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.ஐ. தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் உள்பட 5 பேரை சி.பி.ஐ. காவலுக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.இந்த நிலையில், குட்கா ஊழல் வழக்கில் டி.எஸ்.பி. மன்னர் மன்னன், காவல் ஆய்வாளர் சம்பத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஊழல் தொடர்பாக இருவர் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

குட்கா ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் சமயத்தில், செங்குன்றம் சரக உதவி ஆணையராக மன்னர்மன்னர் பதவி வகித்தார். செங்குன்றம் காவல் ஆய்வாளராக சம்பத் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com