

சென்னை,
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் சிபிஎஸ்இ மாணவர்களின் விகிதம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நீட் தேர்வுக்கு முந்தைய காலகட்டத்தில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் சிபிஎஸ்இ மாணவர்களின் விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. 2016-17-ம் கல்வியாண்டில் இந்த விகிதம் 0.97 சதவீதமாக இருந்தது.
ஆனால், நீட் தேர்வு அறிமுகமான பிறகு இந்த நிலை மாறியுள்ளது. 2017-18-ம் கல்வியாண்டில் 25.58 சதவீதமாக இருந்த சிபிஎஸ்இ மாணவர்களின் விகிதம், 2021-22-ம் ஆண்டில் 31.92 சதவீதமாக உயர்ந்தது. தொடர்ந்து, 2022-23-ம் ஆண்டில் 45.55 சதவீதமாகவும், 2024-25-ம் ஆண்டில் 55.51 சதவீதமாகவும் அதிகரித்தது.
2025-26-ம் கல்வியாண்டில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் சிபிஎஸ்இ மாணவர்களின் விகிதம் 56.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது, 2016-17-ம் ஆண்டில் 0.97 சதவீதமாக இருந்த விகிதம், தற்போது 56.33 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த விவரங்கள் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திடம் இருந்து கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு அறிமுகத்துக்குப் பிறகு தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் சிபிஎஸ்இ மாணவர்களின் விகிதத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது.