பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாக நிறுவ வேண்டும் - சிபிஎஸ்இ உத்தரவு


பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாக நிறுவ வேண்டும் - சிபிஎஸ்இ உத்தரவு
x

பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சிபிஎஸ்இ செயலாளர் ஹிமான்சு குப்தா, சிபிஎஸ்இ நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாணவர்களின் பாதுகாப்பு என்பது ஒரு பள்ளியின் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்றாகும். மாணவர்கள் பள்ளியில்தான் பாதுகாப்பான மற்றும் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் அமைப்பை பெறுவது உறுதி செய்யப்படுகிறது. அந்த வகையில் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிபிஎஸ்இ வாரியத்தின் இணைப்பு துணைச் சட்டங்கள்-2018-ல் அத்தியாயம் 4-ல் சில பிரிவை சேர்த்து திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அதன்படி, பள்ளியின் அனைத்து நுழைவு வாயில்கள், வெளியேறும் இடங்கள், பாதைகள், படிக்கட்டுகள், அனைத்து வகுப்பறைகள், நூலகங்கள், ஆய்வகங்கள், கேண்டீன், ஸ்டோர் ரூம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொது இடங்களில் (கழிவறைகள் தவிர) ஆடியோ பதிவு வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும்.

இந்த கேமராக்களில் குறைந்தது 15 நாட்கள் காட்சிப் பதிவுகளை வைத்திருக்கும் திறன் கொண்ட சாதனத்தை பொருத்தி இருக்க வேண்டும். பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்காக இந்த விதியை கண்டிப்பாக அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

1 More update

Next Story