அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

உடன்குடியில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்
அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Published on

உடன்குடி:

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையொட்டி உடன்குடி ஒன்றிய, நகர அ.தி.மு.க. சார்பில் உடன்குடி மெயின் பஜாரில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சிக்கு உடன்குடி ஒன்றிய செயலாளர் த.தாமோதரன் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் குணசேகரன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் பொன்.ஸ்ரீராம், உடன்குடி ஒன்றிய பொருளாளர் குலசை சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி யூனியன் முன்னாள் துணை தலைவர் ராஜதுரை, மாதவன்குறிச்சி ஊராட்சி தலைவர் சேர்மத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சாயர்புரம் அருகே உள்ள சோலைபுதூரில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சாயர்புரம் நகர பஞ்சாயத்து 7-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் முத்துமாரி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com