திருநெல்வேலியில் செல்போன், பணம் பறிப்பு சம்பவம்: 4 பேர் கைது

திருநெல்வேலியில் செல்போன், ரூ.2 ஆயிரம் பணம் பறிப்பு சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே குற்றத்தில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான், கலைஞர் காலனியில் தூத்துக்குடி மாவட்டத்தைத் சேர்ந்த நாகராஜ் (வயது 47) கட்டுமான பணிக்காக வந்து பணியாற்றி வந்த நிலையில் நேற்று (22.5.2025) அதிகாலை மேற்சொன்ன நபர் இயற்கை உபாதைக்குச் செல்வதற்காக அப்பகுதியிலுள்ள காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த, பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய 4 பேர், மேற்சொன்ன நபரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரம் பணத்தை அவரை மிரட்டி பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, நாகராஜ் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, கங்கைகொண்டான் போாலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி புலன் விசாரணை மேற்கொண்டார். அதில், மேற்சொன்ன சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் ராஜவல்லிபுரம் ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்து. அதில் ஒருவரை கைது செய்தும், மற்ற மூன்று இளஞ்சிறார்களை கையகப்படுத்தியும், அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தினை கைப்பற்றிய போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுத்தனர்.
மேற்சொன்ன சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே குற்றத்தில் ஈடுபட்ட ஒரு எதிரியை கைது செய்தும் மூன்று இளஞ்சிறார்களை கையகப்படுத்தியும், பறிக்கப்பட்ட பொருளையும் மீட்டு துரிதமாக செயல்பட்ட தாழையூத்து உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.






