செல்போன் வெடித்து பெண் பலி

கபிஸ்தலம் அருகே சார்ஜ் போட்டபடியே பேசியதால் செல்போன் வெடித்து தீயில் கருகி பெண் பலியானார்.
செல்போன் வெடித்து பெண் பலி
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள விசித்திரராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பிரபாகரன் மனைவி கோகிலாம்பாள்(வயது 33). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கோகிலாம்பாள், கபிஸ்தலம் அருகே உள்ள மேல கபிஸ்தலம் கொத்த தெரு பகுதியில் உள்ள ஒரு கடையில் கடிகாரம் மற்றும் செல்போன் ரிப்பேர் கடை வைத்து நடத்தி வந்தார்.

செல்போன் வெடித்து பலி

இந்த நிலையில் நேற்று மதியம் கோகிலாம்பாள் தனது கடையில் செல்போனை சார்ஜில் போட்டபடியே செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென செல்போன் வெடித்து தீ பிடித்தது.

இதில் கோகிலாம்பாள் உடல் முழுவதும் தீப்பிடித்து அவர் கடையிலேயே தீயில் கருகி இறந்தார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com