தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு: 3 பேர் கைது


தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறிப்பு: 3 பேர் கைது
x

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் வாலிபர் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தபோது, அங்கு வந்த 3 பேர் அவரது செல்போனை பறித்துச் சென்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள கீழவைப்பார் கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்த அடிமைபீரிஸ் மகன் ரெனோபன் (வயது 23), நேற்று மாலை கோவில் திருவிழாவுக்கு துணி எடுப்பதற்காக தூத்துக்குடி வந்துள்ளார். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது, அங்கு வந்த 3 பேர் இவரது செல்போனை பறித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும்.

அப்போது பேருந்து நிலையத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் விரட்டி பிடித்து மத்திய பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் கீழதட்டாபாறை, மேல தெருவைச் சேர்ந்த ஆறுமுகசாமி மகன் இசக்கிசெல்வம்(19) மற்றும் 2 இளஞ்சிறார்கள் என்று தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story