தூத்துக்குடியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு: 4 பேர் கைது


தூத்துக்குடியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பு: 4 பேர் கைது
x

லட்சுமணகுமார் வீரபாண்டியன்பட்டினத்துக்கு நடந்து சென்றபோது அந்த வழியாக பைக்கில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே வீரபாண்டியன்பட்டினம், மடோனா தெருவைச் சேர்ந்த ராமன் மகன் லட்சுமணகுமார். கட்டடத் தொழிலாளியான இவர், தனது மனைவியின் ஊரான சிவகாசியில் நடைபெற்ற கோயில் கொடை விழாவுக்குச் சென்றுவிட்டு, மே 29ம்தேதி இரவு புன்னைக்காயல் பேருந்தில் ஏறி, ஆத்தூருக்கு மே 30ம்தேதி அதிகாலை வந்துள்ளார். இதனையடுத்து அவர் போதிய பணம் இல்லாததால் வீரபாண்டியன்பட்டினத்துக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர். அவர் பணமில்லை எனக் கூறியதால், அவரது செல்போனை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து லட்சுமணகுமார் அளித்த புகாரின்பேரில், ஆறுமுகனேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப்பதிவு செய்தார். இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையிலான போலீசார் இதுகுறித்து விசாரணை செய்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி பி.அன்.டி காலனியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சக்திவேல் (வயது 20), அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் மகன் வைரமுத்து(19), லெவஞ்சிபுரம் பால்ராஜ் மகன் செல்வராஜ்(19) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story