ஓடும் பஸ்சில் செல்போன் திருட்டு: 2 பெண்கள் கைது

சக பயணிகள் இரு பெண்களைகையும், களவுமாக மடக்கி பிடித்தனர்.
கோவை,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மான்கவு பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் குமார் (வயது39). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது தாயுடன் திருப்பூரில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர்கள் கோவை காந்திபுரம் வந்து சாய்பாபா கோவிலுக்கு செல்ல தனியார் பஸ்சில் ஏறினர். அந்த பஸ், மேட்டுப்பாளையம் ரோடு தனியார் கல்லூரி அருகே சென்ற போது லோகேஷ்குமாரின் தாயார் பையில் வைத்து இருந்த செல்போனை திருடி விட்டு 2 பெண்கள் தப்பி செல்ல முயன்றனர்.
உடனே அவர், சக பயணிகள் உதவியுடன் அந்த பெண்களைகையும், களவுமாக மடக்கி பிடித்து சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த அனிதா (19), நாகம்மாள் (20) என்பதும், அவர்கள் பஸ் நிலையம் மற்றும் நடைமேடை பகுதியில் தங்கி குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ெசல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.






