செல்போன் கோபுரத்தில் மின்னல் தாக்கியது: வங்கியில் 5 கம்ப்யூட்டர் வெடித்து சேதமானதால் ஊழியர்கள் அச்சம்

செல்போன் கோபுரத்தில் மின்னல் தாக்கியதால். வங்கியில் 5 கம்ப்யூட்டர் வெடித்து சேதமானது. இதனால் வங்கி ஊழியர்கள் அச்சமடைந்தனா.
செல்போன் கோபுரத்தில் மின்னல் தாக்கியது: வங்கியில் 5 கம்ப்யூட்டர் வெடித்து சேதமானதால் ஊழியர்கள் அச்சம்
Published on

திட்டக்குடி,

திட்டக்குடி பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. சிறுமங்களம் கிராமத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியின் பின்புறம் பயன்பாட்டில் இல்லாத செல்போன் கோபுரத்தை மின்னல் தாக்கியது. இதனால் அந்த வங்கியில் இருந்த 5 கம்ப்யூட்டர்கள், கண்காணிப்பு கேமராக்கள், டி.வி., மின்விசிறி ஆகியவை வெடித்து சேதமானது. இதனால் வங்கியில் பணியில் இருந்த ஊழியர்கள் அச்சமடைந்தனர். இணையதளமும் துண்டிக்கப்பட்டதால் வங்கி பணி பாதிக்கப்பட்டது.

மேலும் அந்த கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்விசிறிகள், மின்விளக்குகள், மிக்சி, குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அனைத்தும் பழுதானது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com