புழல் சிறையில் 4 கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
புழல் சிறையில் 4 கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல்
Published on

புழல்,

சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலான கைதிகள் செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். சிறை போலீசாரும் அடிக்கடி சோதனை செய்து செல்போன்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை 10-க்கும் மேற்பட்ட சிறை போலீசார் விசாரணை சிறையில் உள்ள கைதிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது பல்வேறு வழக்குகளில் சிறையில் உள்ள நெப்போலியன்(வயது 37), சங்கர்(30), சபரி(28) மற்றும் அப்பன் ராஜ்(27) ஆகிய 4 கைதிகள் செல்போன் பயன்படுத்தியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்த புகாரின்பேரில் புழல் போலீசார் செல்போன்களை பறிமுதல் செய்து, சிறையில் உள்ள கைதிகளுக்கு செல்போன்கள் கிடைத்தது எப்படி? அந்த செல்போன்கள் மூலம் அவர்கள் யாருடன் பேசினார்கள்? என விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com