

சென்னை,
சென்னை மாநகராட்சியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணிகள் (Phase-II) வருகின்ற பிப்ரவரி-2027 முதல் தொடரவுள்ளதை முன்னிட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு இன்று பயிற்சி நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (Census 2027)-ன் முதல் கட்டமாக வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்துள்ளது. இரண்டாவது கட்டமாக (Phase-II) மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வருகின்ற பிப்ரவரி-2027 முதல் தொடரவுள்ளதை முன்னிட்டு, சம்பந்தப்பட்ட பொறுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள்/மண்டல அலுவலர்கள், கூடுதல் பொறுப்பு அலுவலர்கள், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எழுத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் ஆகியோருக்கு பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் நேற்று (30.10.2026) நடைபெற்றது. மேலும், இந்தப் பயிற்சியானது, இன்றும் (31.10.2026) நடைபெறுகிறது.
இப்பயிற்சி வகுப்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துணை இயக்குநர், தலைமையில் துணை மாநகர மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் /மாநகர வருவாய் அலுவலர் உள்ளிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்கள் உதவி ஆணையர் (வருவாய் ) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.