தமிழ்நாட்டில் ஆக. 1- 30-ந்தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு

இணையதளத்திலும் பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.
தமிழ்நாட்டில் ஆக. 1- 30-ந்தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு
Published on

சென்னை,

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு கொரோனா தொற்றுகாரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது 2025-2026-ம் ஆண்டுகாலகட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இந்திய வரலாற்றில், 2025-2026-ம் ஆண்டு கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்ல் முறையில் நடக்கிறது. மக்கள் தங்களை பற்றிய தகவல்களை "செல்போன் செயலி மூலம்" தாங்களாகவே பதிவு செய்யும் வசதியும் இருக்கிறது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 1 - 30 வரை மக்கள் கணக்கெடுப்பிற்காக அலுவலவர்கள் வீடு தேடி வருவார்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி சுந்தரேஷ் பாபு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறி இருப்பதாவது;

”ஆகஸ்ட் 1 - 30 வரை மக்கள் கணக்கெடுப்பிற்காக அலுவலவர்கள் வீடு தேடி வருவார்கள். 33 கேள்விகள் கேட்கப்படும். நாளை முதல் ஜூலை 31 வரை https://se.census.gov.in/ என்ற இணையதளத்திலும் பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம். இணையதளத்தில் பதிவது கட்டாயமல்ல. ஆன்லைனில் பதிவு செய்தால் அலுவலர்கள் நேரில் வரும்போது அதனை சரிபார்ப்பார்கள். இல்லையென்றால் அவர்களாகவே விவரங்களை கேட்டுப் பெறுவார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com