மத்திய, மாநில அரசுகள் இரட்டை என்ஜின் போல் செயல்பட வேண்டும்

மத்திய,மாநில அரசுகள் இரட்டை என்ஜின் போல் செயல்பட வேண்டும் என்று தேனியில் பா.ஜ.க. மாநில செயலாளர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்
மத்திய, மாநில அரசுகள் இரட்டை என்ஜின் போல் செயல்பட வேண்டும்
Published on

தேனியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. பா.ஜ.க. மாநில செயலாளர் சரவணக்குமரன் கலந்துகொண்டு சாதனை மலரை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. அரசு நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இரட்டை என்ஜின் போன்று செயல்பட வேண்டும். அப்போது தான் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடையும். பா.ஜ.க. அரசுடன் அ.தி.மு.க. அரசு இணைந்து செயல்பட்டதால் தான் தமிழகத்தில் 14 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக தி.மு.க. அரசு மத்திய அரசோடு இணக்கமாக செயல்படாததால் பல திட்டங்கள் மக்களை சென்றடையாமல் உள்ளது. இதனால் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்த கையேடும் வினியோகம் செய்யப்பட உள்ளது. தி.மு.க. அரசின் ஊழல் பட்டியலை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆதாரத்துடன் வெளியிடுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com