சென்டிரல்-அரக்கோணம் மின்சார ரெயில் பகுதியாக ரத்து

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் மற்றும் மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது.
சென்டிரல்-அரக்கோணம் மின்சார ரெயில் பகுதியாக ரத்து
Published on

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் மற்றும் மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது.

அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 16-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை காலை 11 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில் பகுதி நேரமாக திருவலங்காடு-அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் ரெயிலும் பகுதி நேரமாக திருத்தணி-திருவலங்காடு இடையே ரத்து செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com